Wednesday, 11 February 2015

கால்பந்தாட்ட மைதானத்தில் அடி… உதை… 22 பேர் பலி..!


எகிப்திய கெய்ரோ நகரிலுள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் விளையாட்டை கண்டுகளிக்க முண்டியடித்த ரசிகர்களுக்கும் போலிஸாருக்குமிடையே ஏற்பட்ட மோதலின் போது இடம்பெற்ற ஜன நெரிசலில் சிக்கி குறைந்தது 22 பேர் பலியானதுடன் 25 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
சமாலெக் விளையாட்டுக் கழகத்திற்கும் என்பி விளையாட்டு கழகத்திற்கும் இடையில் இடம்பெற்ற விளையாட்டைக் கண்டு களிக்க சமலெக் கழகத்தின் ஆதரவாளர்கள் முண்டியடித்தபோது அவர்களைக் களைக்க போலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்த போதே மேற்படி மோதல் இடம்பெற்றுள்ளது.
(மோதல் வீடியோ கீழே)
மேற்படி சம்பவத்தின் போது மைதானத்தின் தனியொரு வாயில் மட்டுமே அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்டிருந்ததன் காரணமாகவே கடும் ஜனநெரிசல் ஏற்பட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சமாலெக் கழக ஆதரவாளர்கள் குழுவான வைட் நைட் ஸை சேர்ந்த தலைவர்களை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்படி ஏர் டி வன்ஸ் கால்பந்தாட்ட மைதானத்திலான விளையாட்டுகள் காலவரையறையின்றி இரத்துச் செய்யப்படவுள்ளன. இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு போர்ட் செய்த் நகரில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் இடம்பெற்ற கலவரத்தில் 74 ரசிகர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(மோதல் வீடியோ கீழே)

No comments:

Post a Comment