பிப்ரவரி 12
1809
அடிமைதனத்தை ஒழித்ததுடன் அமெரிக்க ஒன்றியத்துக்காக உயிரை விட்ட ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம்
ஐக்கிய அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். அமெரிக்காவில் தலை விரித்தாடிய அடிமை முறையை எதிர்த்து குரல் கொடுத்ததுடன் அதை ஒழுக்கவும் செய்தார். 1860ல் லிங்கன் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நின்று குடியரசுத் தலைவரானார்.
இதற்கு முன் இவர் மேற்கு மாநிலங்களின் தலைவராக இருந்தார். அந்த காலத்தில் அமெரிக்காவில் இனவெறியும், அடிமைத் தனமும் தலைவிரித்தாடின. கருப்பின மக்கள் மிகக் கொடூரமாக அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
அமெரிக்காவின் ஒரு சாரர், அவர்களுக்கு உரிமை அளித்து அவர்களையும் தம்முடன் இணைத்துக் கொள்ள நினைத்தனர். ஆனால், பெரும்பாலான அமெரிக்கர்கள் கருப்பின மக்களை மனிதர்களாகவே நினைக்கவில்லை.
ஒரு கால்நடையைப் போல அடித்து துன்புறுத்தி அடிமைகளாக வளர்த்து வந்தனர். இதனை முழுவதுமாக ஆபிரகம் லிங்கன் எதிர்த்தார். அடிமைதனத்தை அமெரிக்க முழுவதும் ஒழிப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்.
வட அமெரிக்க மக்கள் நகரங்களில் வாழ்ந்து வந்தனர். எனவே அவர்களுக்கு இந்த அடிமை ஒழிப்பு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. ஆனால் தென் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான அமெரிக்கர்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வந்தனர்.
அவர்களது தோட்ட வேலைகளுக்கு அடிமைகளையே நம்பி இருந்தனர். இதனால், தென் அமெரிக்காவை தனி ஒரு நாடாக உருவாக்க வேண்டும் என்ற கிளர்ச்சி எழுந்தது. இந்த கிளர்வு உள்நாட்டுப் போராக வெடித்தது.
அமெரிக்க ஒன்றியம் சிதறாமல் இருக்க வேண்டும் என்றால் இந்தப் போரை எதிர் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு லிங்கன் தள்ளப்பட்டார். நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் நடந்த இப்போரில் லிங்கன் வெற்றி கொண்டார்.
இதைத் தொடர்ந்து, 1863ல் அடிமைகள் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ஆபிரகாம் லிங்கன். என்றாலும் 1865ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் படி தான் அடிமைத் தனம் ஒழிக்கப்பட்டது.
இவர் ஒரு தலைவர் என்பதை உணர்த்திய இவரது கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு இன்றும் அமெரிக்கர்கள் மத்தியில் இவரது புகழை நிலைக்கச் செய்துள்ளன. 1865ம் ஆண்டு வாஷிங்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவர் ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொன்றார்.
இதனால், அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்தார் என்ற புகழைப் பெற்றார் லிங்கன்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1502 - இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
1809 - உயிரிகள் பரிணமிக்கின்றன என்ற உண்மையைக் கண்டறிந்த சார்லஸ் டார்வின் பிறந்தார்.
1832 - லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
1912 - சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.
இன்றைய சிறப்பு தினம்
டார்வின் நாள்(டார்வின் பிறப்பை குறிக்கும் நாள்)
ஜார்ஜியா நாள் (ஜார்ஜியா)
ரெட் கை தினம் (ஐக்கிய நாடுகள்)
யூனியன் நாள் (மியான்மர்)
இளைஞர் தினம் (வெனிசுலா)
.jpg)
No comments:
Post a Comment